கொழும்பு – வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு பணியாளராக சென்றுள்ளார் எனவும், மேல்மாடியில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














