அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரும்ப் க்கும் தொழிலதிபர் எலன் மஸ்க்கிட்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்ற நிலையில்,இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் ட்ரம்பின் பெயர் உள்ளதாக கூறி ‘எக்ஸ்’ தளத்தில் எலன் மஸ்க் வெளியிட்ட பதிவை அவர் தற்போது நீக்கியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையிலான வார்த்தை மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக எலாஸ் மஸ்கின் குற்றச்சாட்டு குறித்து பேசிய ட்ரம்ப், “எலான் மஸ்க் என்னை எதிர்ப்பது எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் இதை பல மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















