இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் “இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.
கடந்த சில மணிநேரங்களில் ஈரான் இஸ்ரேலிய பிரதேசங்கள் மீது பல ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று அமெரிக்கத் தலைவர் எச்சரித்தார்.
இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் டரம்ப்,
போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள் – என்று பதிவிட்டார்.

செவ்வாய்க்கிழமை காலை 0400 மணிக்கு தொடங்கும் இந்த போர் நிறுத்தம் 24 மணி நேர கட்டமாக இருக்கும் என்றும், ஈரான் ஒருதலைப்பட்சமாக முதலில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும் என்றும் அமெரிக்கத் தலைவர் முன்னதாகக் கூறியிருந்தார்.
12 மணி நேரத்திற்குப் பின்னர் இஸ்ரேல் இதைப் பின்பற்றும் என்றும் அவர் கூறினார்.
இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்தன.
ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் டெல் அவிவ் கூறியது.


















