மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர்.
இதனை தொடர்ந்து பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.


















