இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் , இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த வாரம் தகவல் வெளியாகியதையடுத்து இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.















