கொழும்பு, பொரளை பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், துப்பாக்கிதாரிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டில் இறப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















