மத்திய காசாவில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 08 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மத்திய காசாவில் நேற்றையதினம் தண்ணீர் சேகரிக்கச் சென்றவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த தாக்குதலில் இஸ்ரேலிய ஏவுகணை அப்பகுதியில் உள்ள ஒரு இஸ்லாமிய ஜிஹாத் போராளியைத் தாக்கும் நோக்கம் கொண்டு ஏவப்பட்டகாகவும் , ஆனால் ஒரு செயலிழப்பு காரணமாக அது இலக்கை தவறவிட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.














