சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்குடன் தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தின் ( Nine Arch Bridge) ஈர்ப்பை மேம்படுத்துவதற்காக மத்திய கலாச்சார நிதியத்துடன் (CCF) இணைந்து இலங்கையின் ரயில்வே திணைக்களம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த திட்டத்தில் இலங்கையின் புகழ்பெற்ற சின்னமான பாலத்தைச் சுற்றி அலங்கார விளக்குகள் பொருத்தப்படும்.
இதனால், சுற்றுலாப் பயணிகள் இரவு நேரத்திலும் இந்த இடத்தை ரசிக்கலாம்.
இந்த திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர குறிப்பிட்டார்.
நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு ஹோட்டல் திட்டத்தை உள்ளடக்கிய ஒரு தனி சுற்றுலா முயற்சி பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த திட்டத்தில் மறுபயன்பாட்டு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட தங்குமிடங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.














