மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையில், ஹட்டன் – சமனலகம பகுதியிலுள்ள வீடொன்று மீது மண்மேடு சரிந்து விழுந்து வீடு சேதமடைந்துள்ளது.
குறித்த அனர்த்தம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளதென வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு இக்குடும்பத்தினருக்கு ஹட்டன் – டிக்கோயா நகரசபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன், சமனலகல வீடமைப்பு பகுதி மண்சரிவு அபாயமிக்க பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் உள்ள சிலருக்கு ஹட்டனில் வேறு இடங்களில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.















