இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து தயாரித்த முதல் கூட்டு செயற்கைக்கோளான நிசார் (Nisar) நாளை(30) விண்ணில் ஏவப்படவுள்ளது.
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ஏவுகணை (GSLV-F16 rocket) மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை மாலை 5.40 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்க்கின்றன.
இதேவேளை, இந்த ஏவுகணை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேரகாலக்கெடு இன்று பகல் 1.40 மணிக்கு தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘இஸ்ரோ-நாசா இணைந்து பூமியைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக்கோளான ‘நிசார்’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது எனவும் இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமித் தரவுகளை வழங்கும்’ எனவும் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.



















