நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வலான மோசடி தடுப்புப் பிரிவில் இன்று (30) காலை சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமஹி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் ரக வாகனம் தொடர்பான குற்றச்சாட்டின் விசாரணையின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், இன்று காலை பாணந்துறை – வலான குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.
மேலும் குறித்த சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பாக அவரது கணவர் தனுஷ்க வீரக்கொடி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பாணந்துறை – வலான குற்றத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.














