ஒன்லைன் மோசடிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் தீவிரமான மற்றும் வலுவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்பவர்களுடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகளை வாட்ஸ்அப் நீக்கியுள்ளதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்குகள் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குற்றவியல் மோசடி மையங்களுடன் தொடர்புடையவை.
இந்தக் கணக்குகள் பிரமிட் திட்டங்கள் மற்றும் போலி முதலீட்டு வாய்ப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை சுரண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.















