மினுவாங்கொட, யட்டியான பகுதியில் 850 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 2.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 28 பைகளில் அடைக்கப்பட்ட 850 கிலோகிராம் பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு கடற்கரை வீதி பகுதியில் குறித்த பீடி இலைகள் லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்டபோதே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில், மினுவாங்கொட யட்டியான பகுதியைச் சேர்ந்த 23 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.














