குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பாடசாலைக்கு வெளியே தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவன் ஒருவர், தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவரால் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து பெரும் போராட்டம் வெடித்தது.
தாக்குதலில் படுகயாமடைந்த மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், செவ்வாய்க்கிழமை (19) இரவு சிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்தியால் குத்தப்பட்ட மாணவர் சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவரது மரணச் செய்தியைக் கேட்டதும், அதிகாலையில் ஏராளமான சமூகத்தினர் பாடசாலையில் கூடியிருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன்.
இந்த சம்பவம் மாணவரின் பெற்றோர், இந்து அமைப்புகள் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கோபத்தைத் தூண்டியது.
போராட்டக்காரர்கள் பாடசாலை வளாகத்தில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
மேலும், பாடசாலை ஊழியர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதத்தினால் தாக்குதலை மேற்கொண்ட குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் சட்டங்களின் கீழ் பொலிஸார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

















