பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீபரவல் காரணமாக வீடுகளில் இருந்த உடமைகள் எரிந்துள்ளதோடு எவருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகம் ஊடாக உணவுகள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இதேவேளை, தீபற்றியமைக்கான காரணத்தை கண்டறியாத நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















