அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் நேற்றையதினம் (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏர்ஏசியா QZ545 எனும் விமானத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் கிளம்பியதை அடுத்து, விமானிகள் விமானத்தை மீண்டும் பெர்த் விமான நிலையத்தில் தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, விமானத்தின் விளக்குகள் முற்றிலுமாக அணைந்துவிட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானம் ரோட்னெஸ்ட் தீவு அருகே ஒரு வட்டத்தில் சுற்றியதாகவும், விமானத்தில் இருந்த எரிபொருளை முடித்து , பின்னர் மீண்டும் பெர்த் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இன்று காலை இரண்டு விமானங்களுக்கு, குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் பெர்த் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.














