பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டதற்கான சரியான காரணத்தை சபாநாயகர் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கோரினர்.













