2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (17) நடைபெற்ற 10 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
எமிரேட்ஸுக்கு எதிரான பாகிஸ்தானின் இந்த பெரிய வெற்றி குழு A இல் முதல் இரண்டு அணிகளுக்குள் இடம்பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற உதவியது.
இதன் மூலம் அவர்கள், செப்டம்பர் 21 ஆம் திகதி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரியான இந்தியாவை எதிர்த்து அவர்கள் மீண்டும் ஒருமுறை மோத வழிவகுத்துள்ளது.
கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நேற்றையே போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக, ஃபகர் ஜமான் 36 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார்.
ஷாஹீன் ஷா அப்ரிடி 14 பந்துகளில் 29 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகுளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக, வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் சித்திக் நான்கு ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங் நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், 147 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எமிரேட்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
எமிரேட்ஸ் அணி சார்பில் அதிகபடியாக ராகுல் சோப்ரா 35 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணிக்காக ஷாஹீன், அப்ரார் அகமட் மற்றும் ஹாரிஸ் ரவூஃப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்களில் ஒருவரை சைம் அயூப் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் பெவிலியன் திருப்பி அனுப்பினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஷாஹீன் அஃப்ரிடி தெரிவானார்.
















