கிளிநொச்சியில் நேற்று (18) இரவு ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி வீழ்ந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உருத்திராபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்து ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.















