தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, 705 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த போதைப்பொருள்கள் காணப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய ஒரு விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மர்மமான முறையில் இறந்த மூன்று பேரின் உடல்களின் பிரேத பரிசோதனையில், அவர்கள் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்களின் உடல்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைகளை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார்.
இறந்தவர் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக இதன்போது தெரியவந்துள்ளது.














