தமிழகத்தின் பாண்டிச்சேரியை சேர்ந்த 17 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி படகு ஒன்றில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை(11) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த 17 மீனவர்களும் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று நீரியல்வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















