லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து வார இறுதி நாட்களில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோக்கள் அல்லது 100 மில்லியன் டொலர்களுக்கு சற்று அதிகம் என்று பாரிஸ் சட்டத்தரணி செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் தெரிவித்தார்.
இந்தத் தொகை “அசாதாரணமானது” என்று RTL வானொலிச் சேவையிடம் தெரிவித்த லாரே பெக்குவா, பிரான்சின் வரலாற்று பாரம்பரியத்திற்கு இது மிகப்பெரிய இழப்பு என்றார்.
இரண்டு நெப்போலியன்கள் தங்கள் மனைவிகளுக்கு பரிசளித்த கிரீட நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் ஆகியவையும் கொள்ளையிடப்பட்ட பொருட்களில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை, கொள்ளையர்கள் லூவ்ரின் இரண்டாவது மாடிக்கு இயந்திர ஏணியில் ஏறி, ஒரு ஜன்னலை வெட்டி உள்நுழைந்து, அங்கு சில நிமிடங்களிலேயே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளை நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும் திருடர்கள் பிடிபடாததால், நகைகள் ஏற்கனவே தொலைந்து போயிருக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
















