ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் தகவல்களின்படி, இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.
அவர் தற்சமயம் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.















