கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் குறித்து எதிர்மறையாகப் பேசும் விளம்பரத்தை வெளியிட்டதன் எதிரெலியாக ட்ரம்பின் இந்த அறிவிப்பு வியாழக்கிழமை (23) இரவு வந்தது.
இந்த விளம்பரங்கள் அமெரிக்க நீதிமன்ற முடிவுகளை பாதிக்கும் நோக்கிலான “மோசமான நடத்தை” என்று அவர் விவரித்தார்.
குறித்த விளம்பரத்தில் 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஜப்பானிய தயாரிப்புகளுக்கு சில வரிகளை விதித்தபோதும், அதிக வரிகளின் நீண்டகால பொருளாதார அபாயங்கள் மற்றும் வர்த்தகப் போரின் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தபோதும் ஆற்றிய உரையின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, ரொனால்ட் ரீகன் வரிகள் பற்றி எதிர்மறையாகப் பேசும் விளம்பரத்தை கனடா மோசடியாகப் பயன்படுத்தியதாக ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை வியாழக்கிழமை (23) மாலை அறிவித்துள்ளது.















