யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று காலை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள சமிக்ஞை விளக்குப் பொருத்திய பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
யாழ்ப்பாணத்திலிந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சமிக்ஞைக்காக காத்திருந்த ஐந்து வாகனங்களை வேகமாக கடந்து செல்ல முற்பட்ட போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்து மோட்டார் சைக்கிள், கெப் ரகவாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது ஆறுபேர் காயமடைந்துள்ளதுடன் . பலத்த காயங்களுக்குள்ளாகிய ஒருவர் உட்பட நால்வர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இருவர் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இந்த விபத்தினை தொடர்ந்த குறித்த பகுதியில் பதற்ற ஏற்பட்டிருந்தது .














