அடுத்த மாதம் பெர்த்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகு வலி காரணமாக மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த கம்மின்ஸ் மீண்டும் விளையாடத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் ஆஷஸ் தொடக்கப் போட்டிக்கு அவர் சரியான நேரத்தில் உடற்தகுதி பெற மாட்டார் என்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா திங்கள்கிழமை (27) தெரிவித்துள்ளது.
2025 கிரிக்கெட் நாட்காட்டியில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நவம்பர் 21 அன்று தொடங்கும் போது, கம்மின்ஸ் இல்லாத நிலையில் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலியாவை வழிநடத்துவார்.
அதைத் தொடர்ந்து டிசம்பர் 4 முதல் பிரிஸ்பேனில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் பின்னர் அடிலெய்டு, மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கு நகரும்.
ஜூலை மாதம் கரீபியனில் மேற்கிந்தியத் தீவுகளை அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வென்றதிலிருந்து 32 வயதான கம்மின்ஸ் பந்து வீசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.















