இங்கிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு (James Anderson), பிரித்தானிய முடியாட்சியால் ‘நைட்’ (Knight) பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளது.
3 வயதான ஆண்டர்சன், வின்ட்சர் கோட்டையில் இளவரசி ராயல் (Princess Royal) அவர்களால் இந்த உயரிய பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
22 ஆண்டுகள் நீடித்த தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், இவர் 188 டெஸ்ட் போட்டிகளில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி, முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் இராஜினாமா கௌரவப் பட்டியலில் ஆண்டர்சன் பெயரிடப்பட்டிருந்தார்.



















