இங்கிலாந்தில் கிட்டத்தட்ட அரைவாசி இளைஞர்களின் மனநலம் அவர்களது பாடசாலை அல்லது கல்லூரி வருகையைப் பாதிக்கிறது என மைண்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேவேளை, கோவிட் 19 தொற்று காலப்பகுதி ஊரடங்குக்குப் பின்னரான தலைமுறை இந்த சிரமங்களைச் சந்திப்பதாகவும் அவர்களில் 18 வயதுடையவர்களில் 48% பேரும் 22 வயதுடையவர்களில் 45% பேரும்
சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
23 வயதான அப்திரிசாக் முகமது, தான் எதிர்கொண்ட மனநலப் பிரச்சினைகள் குறித்து ஊடகம் ஒன்றிற்கு
கருத்து தெரிவித்தார்.
அதில் தனக்கு மிகவும் மோசமான மனநிலை மட்டுமே நினைவில் இருக்கிறது எனவும் தான் காலையில் எழுந்த ஒவ்வொரு முறையும் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று உணர்ந்ததாகவும் என்று அவர் கூறினார்.
மேலும் நாம் நம்மீது கொடுக்கும் அழுத்தமே இவ்வாறான மனநோய்க்கு காரணமாகும் எனவும் தானும் அதனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



















