தாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் காபூல் அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.
துர்கியேயில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர் நிறுத்தத்தை குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை இறுதி செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி இஸ்தான்புல்லில் ஒரு உயர் மட்டக் கூட்டத்தில் மீண்டும் சந்திக்க இரு தரப்பினரும் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்தியஸ்தர்களான துர்கியே மற்றும் கத்தார் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமைதியைப் பேணுவதை உறுதி செய்வதற்கும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் ஒரு கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு பொறிமுறையை நிறுவ அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021 இல் தலிபான்கள் காபூலை மீண்டும் கைப்பற்றியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே மிக கடுமையாக மோதல் நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்த எல்லை தாண்டிய தாக்குதல்களில், 200க்கும் மேற்பட்ட ஆப்கானிய போராளிகளைக் கொன்றதாக பாகிஸ்தான் இராணுவமும் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாக ஆப்கானிஸ்தானும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.














