கென்யப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவதுடன் தொடர்புடைய பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் நாடுகடத்தப்படும் நடவடிக்கையை வரவேற்பதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான (Robert James Purkiss ) ராபர்ட் ஜேம்ஸ் பர்கிஸ் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், கடந்த 2012 இல் கென்யாவில் 21 வயதான ( Agnes Wanjiru,) ஆக்னஸ் வான்ஜிருவை தான் கொலை செய்யவில்லை என தொடர்ந்தும் மறுத்து வந்துள்ள நிலையில் பின்னர் கொலையை தான் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கென்யாவின் நான்யுகி நகரில் 21 வயதான ( Agnes Wanjiru,) ஆக்னஸ் வான்ஜிரு காணமல் போன நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஒரு செப்டிக் டேங்கில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அவர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவர் கொலை செய்ததாக 38 வயதான (Robert James Purkiss ) ராபர்ட் ஜேம்ஸ் பர்கிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதை அடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது பலாத்கார முயட்சியின் விளைவாகவே அவரை கொலை செய்ததாக கூறி கொலையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே வர நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


















