இங்கிலாந்தில் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் இறப்புகளைத் தடுக்கத் தவறும் கவுன்சில்கள் ஆணவக் கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என நடிகரும் இயக்குநருமான (Samantha Morton) சமந்தா மோர்டன் கூறியுள்ளார்.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, பாஃப்டா விருது பெற்ற நடிகரும் இயக்குநருமான அவர் இங்கிலாந்தின் பராமரிப்பு முறையை “முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நோனிடா எனும் 18 வயது பெண் இவ்வாறான மாநில பராமரிப்பில் வளர்ந்த நிலையில் தற்கொலை செய்துக்கொண்டார்.
தனக்கு 18 வயது ஆனவுடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவள் மருத்துவர்களிடமும் சமூக சேவையாளர்களிடமும் முன்பே கூறியிருந்த நிலையில் அவர்கள் யாரும் அவளது மரணத்தை தடுக்கவில்லை .
இந்நிலையிலேயே உயிரிழந்த நோனிடாவின் வாழ்கை கதை ஆவணப்படமாக எடுக்கப்பட்ட நிலையில் நடிகரும் இயக்குனருமான (Samantha Morton) சமந்தா மோர்டன் பராமரிப்பு முறையை “முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.















