(Conor Benn) கொனோர் பென் மற்றும் (Chris Eubank ) கிறிஸ் யூபாங்க் ஜூனியர் ஆகியோருக்கு இடையேயான குத்துச்சண்டை மறுபோட்டியில் (Conor Benn) கொனோர் பென் வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை, இந்த வெற்றியானது ஏப்ரல் மாதம் நடந்த முந்தைய போட்டியில் யூபாங்க் ஜூனியரிடம் தான் அடைந்த தோல்விக்குப் பழிவாங்கும் செயலாக அமைந்துள்ளதாக (Conor Benn) கொனோர் பென் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (Tottenham Hotspur ) டேட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் (Conor Benn) கொனோர் பென் அதிக ஆதிக்கம் செலுத்தி கடைசி சுற்றில் யூபாங்க் ஜூனியரை இரண்டு முறை கீழே தள்ளினார்.
35 வருடங்களாக நீடித்த குடும்ப மோதலின் ஒரு பகுதியாக இந்தப் போட்டி பார்க்கப்பட்டது, ஆனால் (Conor Benn) கொனோர் பென் இந்த வெற்றிக்குப் பின்னர் மூன்றாவது சுற்றுப் போட்டியை நிராகரித்தார்.
பென்னின் இந்த வெற்றி, அவரது தந்தை மற்றும் எடி ஹியர்ன் ஆகியோரால் உலக சாம்பியன்ஷிப் சண்டைக்கு அவரைத் தகுதிப்படுத்தும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.















