முன்னாள் நர்ஸரி பணியாளரான வின்சென்ட் சான் (45 வயது) குழந்தைகளுக்கு எதிரான 26 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
2017 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வடக்கு இங்கிலாந்தில் பல பாலியல் தாக்குதல்கள் மற்றும் மிகவும் தீவிரமான துஷ்பிரயோக படங்களை உருவாக்குதல் மற்றும் வைத்திருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல குற்றங்கள் குறித்த நபரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக ஒரு குழந்தையை இழிவான நோக்கங்களுக்காகப் படம் பிடித்ததாக குறித்த நபர் மீது சக ஊழியர் ஒருவர் புகாரளித்தபோதே இவரது உண்மையான குணம் வெளியானது.
இதேவேளை, பொலிஸார் குறித்த நபரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளை அடையாளம் கண்ட நிலையில் , அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வின்சென்ட் சான் குறித்த நர்சரியில் பணியாற்றிய காலத்தில் அந்த நிறுவனத்தில் பயின்ற அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு உதவிகளை வழங்கும் அதிகாரிகளில் ஒருவராக அவர் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு பாதுகாப்பான சூழலை தவறு செய்வதற்கு சாதகமாக சான் பயன்படுத்திக் கொண்டதை இந்த வழக்கை வழிநடத்திய துப்பறியும் அதிகாரி ஒருவர் கண்டறிந்துள்ளார்.
இந்நிலையிலேயே சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குற்றங்களை மறுத்து வந்த அவர் தற்போது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இனி வரும் விசாரணையில் அவருக்கு மிகவும் கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர்














