இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகி 24 சுற்றுக்களை கொண்டதாக கிரோன்ப்ரீ போட்டிகள் இடம்பெற்று வருகின்றன, அந்தவகையில் இதுவரை 22 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7 போட்டிகளில் பியாஸ்ட்ரி மற்றும் நொரிஸ் ஆகியோரும் வெஸ்டாபன் 06 போட்டியிலும் ரஸ்ஸல் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 23வது குரொன்ப்ரீ போட்டி கட்டாரில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த போட்டியில் நொரிஸ் வெற்றிப்பெற்றால் அவர் தான் புள்ளிகள் அடிப்படையில் இப்பருவகாலத்தின் சம்பியனாக மாற்றம் பெறுவார். இருந்தும் அவருக்கு பெரும் போட்டியாக நடப்பு சாம்பியன் வெஸ்டாபன் திகழ்வதால் இன்னும் இரண்டு போட்டிகள் மாத்திரமே உள்ள நிலையில் யார் இம்முறை சாம்பியன் என்பதில் இழுபறி நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் 57 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்களின் ஆக்ரோஸமான தொடக்கத்துடன் சூடுபிடிக்க தொடங்கியது.
பியாஸ்ட்ரி முதலிடத்தில் தொடர வெஸ்டாபன் இரண்டாமிடத்தில் போட்டியை தொடர்ந்தார். ஆரம்பமே ஹெமில்டன் 14மிடத்தையும் லெக்லெர்க் 10மிடத்தையும் பெற்று பின்தங்கினார்கள்.
7வது சுற்றில் வைத்து ஹோகம்பெர்க்கின் வாகனம் விபத்தை சந்தித்தது. இதனால் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதன்போது கஸ்லியின் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
8வது சுற்றில் வைத்து வெஸ்டாபன் அவரின் முதலாவது பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.அவரை தொடர்ந்து முன்னனி வீரர்களான அன்டோனொலி சைன்ஸ் அலோன்சோ என அனைவரும் பிட்ஸ்டொப்பிற்கு வந்தனர்.
11வது சுற்றில் வைத்து மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் பியாஸ்ட்ரி மற்றும் முதலிரண்டு இடங்களை ஆக்கிரமித்திருந்தனர். வெஸ்டாபன் 3மிடத்தில் காணப்பட்டார்.
25வது சுற்றில் வைத்து முதலிடத்திலிருந்த பியாஸ்ட்ரி பிட்ஸ்டொப்பிற்கு வர நொரிஸ் முதலிடத்திற்கும் வெஸ்டாபன் இரண்டபமிடத்திற்கும் சென்றனர். ஆனால் 25 சுற்றுக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நொரிஸ் இன்னமும் பிட்ஸ்டொப்பிற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. அடுத்த சுற்றே பிட்ஸ் டொப்பிற்கு வந்தார் இதனால் வெஸ்டாபன் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் சைன்ஸ் இரண்டாமிடத்திற்கு வந்தார். இருந்தும் நொரிஸ் மிக வேகமாக வாகனத்தின் டயரை மாற்றிக்கொண்டு முன்னேறி சென்றார்.
30வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி மற்றும் நொரிஸ் 4 மற்றும் 5ம் இடங்களில் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தனர். எனினும் சிறப்பாக செயற்பட்ட பியாஸ்ட்ரி அன்டொனெலியை பின்னுக்கு தள்ளி 3 மிடத்திற்கு முன்னேறினார்.33வது சுற்றில் வைத்து வெஸ்டாபன் 2வது பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.
37வது சுற்றில் வைத்து நொரிஸ் எதிர்பாராத விபத்தில் சிக்க இருந்தார் இருந்தும் சுதாகரித்துகொண்டு வாகனத்தை செலுத்தினார்.
43வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி பிட்ஸ்டொப்பிற்கு வந்து தனது வாகனத்தின் டயரை மாற்றி முன்னேறி சென்றார்.45 வது சுற்றில் வைத்து நொரிஸ் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார் இந்த தருணமானது வெஸ்டாபனுக்கு இது நல்ல வாய்ப்பாக மாறியது போட்டியில் வெற்றியை பதிவு செய்ய
56வது சுற்றில் வைத்து நொரிஸ் 5மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார். இருந்தும் விடா முயற்சியின் பயனாக 4மிடத்திற்கு முன்னேறினார்.
இந்நிலையில் 57 சுற்றுக்களையும் 1 மணித்தியாலம் 24 நிமிடங்கள் 38 செக்கன்களில் நிறைவு செய்து நடப்பு சாம்பியன் வெஸ்டாபன் முதலிடத்தை பிடித்து அசத்தினார். பியாஸ்ட்ரி இரண்டாமிடத்தையும் சைன்ஸ் 3மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இன்னும் ஒரு குரொன்ப்ரீ போட்டி மாத்திரமே மீதவுள்ள நிலையில் வெஸ்டாபன் மற்றும் நொரிஸிற்கிடையில் 12 புள்ளிகள் வி;த்தியாசம் காணப்படுகின்றது.
அடுத்த கட்ட போட்டியில் வெஸ்டாபன் வெற்றிப்பெற்று நொரிஸ் 4 மிடத்தை பெற்றால் வெஸ்டாபன் சம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் மாறாக நொரிஸ் முதல் 3 இடங்களில் எந்த இடத்தை பெற்றாலும் அவர் தான் சம்பியன். இம்முறை குரொன்ப்ரீ போட்டிகள் விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.
















