அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால், பிரதான காபட் வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது.
சிரிமங்கலபுரப் பகுதியில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
வீதியின் ஓரம் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மண் அரிப்புக்குள்ளாகி, இடிந்து விழுந்து அருகிலிருந்த வயல்வெளிக்குள் சரிந்துள்ளமையினால் பாதுகாப்பு கருதி, தற்போது வீதியின் ஓரங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பிரதான வீதி மேலும் சேதமடையாமல் இருக்கவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.













