பாதாள உலக்குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே என்று அழைக்கப்படுகின்ற பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து கெஹெல்பத்தர பத்மே பொலிஸ் தடுப்பு காவலில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அனர்த்த நிலைமைகளை இடம்பெற்றாலும் தொடர்ந்து சுற்றிவளைப்ர்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 10 பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீகொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 25 வயதுடையவர்கள் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 15 தோட்டாக்கள், மற்றும் 15 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.














