வெனிசுலாவின் கடற் பகுதியில் ஒரு எண்ணெய் டேங்கர் ஒன்றை கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பின்னர், வெனிசுலா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் மேலும் ஆறு கப்பல்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ள வெனிசுலாவிலிருந்து வந்த எண்ணெய் கப்பல்களுக்கான முதல் தடை இதுவாகும்.
தெற்கு கரீபியனில் அமெரிக்கா பெரிய அளவிலான இராணுவக் கட்டமைப்பை செயல்படுத்தி வரும் போதும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த முன்னேற்றம் வந்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், கைப்பற்றப்பட்ட ஸ்கிப்பர் என்ற கப்பல் சட்டவிரோத எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டதாகவும், அது ஒரு அமெரிக்க துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார்.
அதேநேரம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச கடற்கொள்ளை செயல் என்று வெனிசுலா வர்ணித்துள்ளது.
















