வட கரோலினாவில் அமைந்துள்ள ஒரு பிராந்திய விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் முன்னாள் நாஸ்கர் (Nascar) வீரர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர் என்று கார் பந்தய அமைப்பு தெரிவித்துள்ளது.
(நாஸ்கார் என்பது அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஸ்டாக் கார் பந்தய (கார் ரேசிங்) போட்டி அமைப்பு)
விமானத்தில் ஏறியவர்களில் கிரெக் பிஃபிளும் (Greg Biffle) ஒருவர் என்பதை தரையில் இருந்தவர்கள் உறுதிப்படுத்தியதாக நெடுஞ்சாலை ரோந்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 10:20 மணியளவில் (GMT 15:20) ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்தில் செஸ்னா சி550 என்ற விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரெக் பிஃபிளின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள நாஸ்கார், கார் பந்தைய வீரர் என்பதை தாண்டியும் கிரெக் சமூகம் மீது மிகவும் அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தார் என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
அத்துடன் அந்த அறிக்கையில் நாஸ்கார், பிஃபிள் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோரும் இறந்து விட்டதாக உறுதிபடுத்தியது.
பந்தயத்தின் மீதான அவரது ஆர்வம், அவரது நேர்மை மற்றும் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை விளையாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின என்றும் கார் பந்தய மேலும் கூறியது.



















