தொழில்துறை புரட்சியின் போது காணப்பட்டதைப் போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது தொழிலாளர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார்.
பொருளாதாரம் முழுவதும் செய்கை நுண்ணறிவு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களை அதிகளவில் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்த உதவுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யவது அவசியம் என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கூறினார்.
அந்த அடித்தளங்கள் இல்லாமல் போனால் தொழிலாளர் சந்தை மேலும் துண்டு துண்டாக உடையும் அபாயத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.
அண்மைய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
மேலும் வணிகங்கள் மற்றும் பொதுத்துறையினரால் இது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் கணினிகள் அதிக அளவிலான தரவை செயலாக்கவும், வடிவங்களை அடையாளம் காணவும், அந்தத் தகவலை என்ன செய்வது என்பது குறித்த விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும் அனுமதிக்கிறது.
இருப்பினும், இது ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து இங்கிலாந்தில் கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த மூன்று மாதங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேலையின்மை விகிதம் 5.1% ஆக உயர்ந்துள்ளதை வெளிக்காட்டியது.
இதில் அதிகளவானோர் இளைய தொழிலாளர்கள் ஆவர்.
ஒக்டோபர் மாதம் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் 18 முதல் 24 வயதுடைய வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 85,000 அதிகரித்துள்ளது.
இது நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய வேலையின்மை உயர்வு என்று இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
















