ஆடம்பர அரசு பரிசுகளை குறைந்த விலையில் வாங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அண்மைய தண்டனையானது 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு தொடர்ச்சியான சட்ட சிக்கல்களைச் சேர்க்கிறது.
மேலும் 2022 இல் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து ஊழல் முதல் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அரசு இரகசியக் குற்றச்சாட்டுகள் வரை பல வழக்குகளையும் அவர் எதிர்கொள்கிறார்.
புதிய வழக்கில் நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக பாகிஸ்தானின் தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஊழல் எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் மேலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 16.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானின் அதிகாரப்பூர்வ வருகைகளின் போது இம்ரான் கானுக்கு பரிசளித்த ஆடம்பர கடிகாரங்களுடன் தொடர்புடையது இந்த வழக்கு.
இந்த வழக்கு, 2023 ஆகஸ்ட்டில் இம்ரான் கானின் கைதுடன் தொடர்புடைய முந்தைய அரசு பரிசு வழக்குத் தொடரலில் இருந்து வேறுபட்டது.

















