இலங்கையினை பாரிய அனர்த்தம் தாக்கியபோதிலும் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட போதிலும் ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்குவதற்கு நாடு தயாராகிவருகின்றது.
நாளைய தினம் பாலன் பிறப்பான ஜேசு நாதரின் பிறப்பினை குறிக்கும்; கொண்டாடப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்கு பெருமளவான மக்கள் வருகைதந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.
இதேபோன்று மட்டக்களப்பு நகரில் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டு நத்தார் பாப்பா ஆடிப்பாடி மக்களை மகிழ்விக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றதுடன் பல்வேறு கிறிஸ்தவ மக்களினைக்கொண்ட தேவாலயங்களிலிருந்து சிறுவர்கள் பெரியவர்கள் என பலர் ஆடிப்பாடி கிறிஸ்தவ கரோல் கீதங்களை பாடி மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.


















