கடந்த 22 ஆம் திகதி அம்பலாங்கொடையில் அமைந்துள்ள காட்சியறை ஒன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையிரனால் இரண்டு சந்தேக நபர்களும், காலி குற்றப்பிரிவால் நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, ஹிக்கடுவாவில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவால்வர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.















