முல்லைத்தீவு நாயாற்று பால வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து நேற்றைய தினம் வழமைக்கு திரும்பியுள்ளது.
டிட்வா புயல் மற்றும் மழை வெள்ளத்தினால், முல்லைத்தீவு மாவட்டத்தில் முக்கிய பாலமாக காணப்படும் நாயாற்று பாலம் உடைந்து போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் பாலத்தின் திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்தது.
சேதமடைந்த குறித்த இரண்டு பால புனரமைப்பு பணிகளில் இலங்கை இராணுவத்தின் பொறியில் பிரிவினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து மேற்கொண்ட நிலையில் திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் வீதி ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.















