பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் கூறியுள்ளது.
பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
கடந்த 35 நாட்களில் மட்டுமே 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மேலும், ஹிந்துக்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தமாகி இருந்த முஷ்தபிஜூர் ரகுமான், கோல்கட்டா அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த பங்களாதேஷ் , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.
டில்லி, கோல்கட்டா, சென்னை,மும்பை, அகர்தலா மற்றும் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பங்களாதேஷ் தூதரகங்கள் மூலம் வழங்கப்படும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை தவிர்த்து, சுற்றுலா உள்ளிட்ட பிற வகை விசாக்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ வணிக மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களைத் தவிர, இந்தியர்களுக்கு ஏனைய வகை விசாக்கள் வழங்குவதை நிறுத்திவிட்டோம் என கூறியுள்ளார்.
















