யாழ்ப்பாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(08) முதல் மறு அறிவித்தல் வரையில் குறிகாட்டுவானில் இருந்து தீவகத்திற்கான படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(08) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் , 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














