இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீரேந்து பகுதிகளில் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கலா ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறு இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விநாடிக்கு 50,176 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை நிலவுவதைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள 10 வான் கதவுகளில் 4 கதவுகளை தலா ஒரு அடி வீதம் தொடர்ந்தும் திறந்து வைக்க நீர்ப்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது















