‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தாமாக முன்வந்து தங்கள் உணவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய மெகசின், வெலிகடை, போகம்பரை, மாத்தறை, மஹர, குருவிட்ட, யாழ்ப்பாணம், மொனராகலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இடம்பெயர்ந்த சமூகங்களின் நலனுக்காக தங்கள் உணவைத் துறந்து இந்த மனிதாபிமான முயற்சியில் பங்கேற்றனர்.
திணைக்களத்தின்படி, ஒவ்வொரு சிறைச்சாலையும் நன்கொடையாக வழங்கிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு பின்வருமாறு:
- புதிய மெகசின் சிறைச்சலை – Rs. 450,710
- வெலிக்கடை சிறைச்சாலை – Rs. 454,630
- போகம்பரை சிறைச்சாலை – Rs. 367,949
- மாத்தறை சிறைச்சாலை – ரூ. 105,046
- மஹர சிறைச்சாலை– ரூ. 386,010
- குருவிட்ட சிறைச்சாலை– ரூ. 195,150
- யாழ்ப்பாணச் சிறைச்சாலை – ரூ. 258,612
- மொனராகலை சிறைச்சாலை– ரூ. 96,471
- அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை – ரூ. 540,679
- மட்டக்களப்பு சிறைச்சாலை – ரூ. 209,224












