வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தைப் பரிசாக வழங்கியுள்ளார்.
தற்போது, அந்தப் பதக்கத்தை ட்ரம்ப் தம்மிடமே வைத்துக்கொள்ளப் போவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் எனவும் அவர் பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார் எனவும் பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல் எனவும் நன்றி மரியா என்றும் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக, நோபல் பரிசு பெற்ற ஒருவர், அதனை மற்றுமொருவருக்கு பரிசளிக்க முடியாது என்று நோபல் குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













