காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த சபைக்கு தலைமை வகிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிர்வாக உறுப்பினர்கள் பாலஸ்தீன தொழில்நுட்ப குழுவின் பணிகளை பார்வையிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமைதிக்கான சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் காசாவின் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உறுப்பினர்களின் பதவி குறித்த விரிவான தகவல்களை வெள்ளை மாளிகை இதுவரை வெளியிடவில்லை.











