கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 42 இந்து ஆலயங்கள், 17 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 பள்ளிவாசல்கள் என 65 வழிபாட்டு தளங்களுக்கு தலா 25,000 ஆயிரம் ரூபாய் நிவாரண கொடுப்பனவுகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது
அதேபோன்று மூன்று பௌத்த விகாரைகளுக்கு நிவாரண கொடுப்பனவுகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.













